இது பொன்னுங்களுக்கான படம் இல்ல – ஹெச் வினோத்திடம் கூறிய அஜித் !

Nerkonda Paarvai

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வாசம் எனும் மெஹாஹிட் படத்தைக் கொடுத்த அஜித் அடுத்த ஏழு மாதத்தில் நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய இருக்கிறார்.

அஜித்தின் 59 ஆவது படமான ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் படம்பற்றியும் அஜித் பற்றியும் சிலத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ‘அஜித்திடம் இந்த படத்தை ஒரு பெண் இயக்குனர் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அஜித்தோ அதை மறுத்துவிட்டார். ஒரு பெண் இயக்கினால் நடுநிலையோடு இயக்க முடியாது. மேலும் இது பெண்களுக்கானப் படம் இல்லை. இது ஆண்களுக்கானப் படம். பசங்கதான் பொண்ணுங்கள பத்தி தெரிஞ்சிக்கணும் என்று அவர் கூறினார்.’ எனக் கூறியுள்ளார்.