எந்த படத்திற்கும் செய்யாத ஒன்றை செய்தார் அஜித்

nerkonda paarvai

இது வரை எந்த படத்திற்கும் செய்யாத விஷயத்தை நேர்கொண்ட பார்வை படத்திற்காக செய்துள்ளார் அஜித் என்று இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை பட ட்ரெய்லர் அனைவருக்கும் பிடித்துள்ளது.

இந்தி பட ரீமேக் தானே என்று நினைத்த நிலையில் ட்ரெய்லர் அருமையாக வந்துள்ளது என்று தல ரசிகர்கள் மட்டும் அல்ல பிற ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஹெச். வினோத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,

அஜித் சார் ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். உங்கள் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன் என்று அஜித் சார் ஸ்ரீதேவி மேடத்திடம் வாக்குறுதி அளித்தார்.

அதன்படி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை குடும்பத்துடன் பார்க்கும் படம். இந்த படத்தில் அஜித்தை பார்த்து அசந்துவிடுவீர்கள். அவரின் நடிப்பு இதுவரை நீங்கள் பார்த்திராத அளவுக்கு இருக்கும்.

அவருக்கு மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார். அவர்களின் ஜோடி அவ்வளவு அம்சமாக உள்ளது.

பெண்களை ஆண்கள் எப்படி பார்க்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் கதையின் கரு ஆகும். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை கொண்ட படம்.

நேர்கொண்ட பார்வை பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும். பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் 75 வயது முதியவராக நடித்திருப்பார்.

இந்த படத்தில் அஜித்தை 47 வயது நபராக காட்டியுள்ளோம். பிங்க் படத்தில் சண்டை காட்சிகள் இல்லை. ஆனால் இந்த படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் உள்ளன.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் திருத்தம் செய்துள்ளோம். இந்த படத்தில் பல புதுமுகங்கள் அதுவும் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளனர். அஜித் சார், டப்பிங் பேசுவதற்கு முன்பு படத்தை பார்க்க மாட்டார்.

ஆனால் டப்பிங் பேசுவதற்கு முன்பே நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தார். படத்தை பார்த்த பிறகு என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார் என்றார்.